மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், சாருமதி(16) என்ற மகளும் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் இறந்து விட்டதால் சுகுணா கூலி வேலைக்கு சென்று தனது மகளை படிக்க வைத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி மாணவி வயலுக்கு சென்றுள்ளார். அப்போது விஷப்பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்த மாணவியை உறவினர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த உறவினர்கள் முறையான சிகிச்சை இல்லாததால் தான் சாருமதி உயிரிழந்ததாக கூறி மருத்துவக் கல்லூரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர் இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் சென்ற மனதில் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பிரேத பரிசோதனை அறையை முற்றுகையிட்டனர் எத்தனை அடுத்து உறவினர்களை சமாதானம் செய்து போலீசார் உடலை வாங்க வைத்தனர் இந்த சம்பவம் அப்போதில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது