முறையான பேராசிரியா்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின் மீது கடுமையனா நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்தாா். அதுமட்டுமின்றி , தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) மருத்துவக் கல்லூரிக்கு அமைக்கப்பட்டு வரும் சொந்த கட்டிடம் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும்.
ஆகவே அது குறித்து கவலை வேண்டாம்” என்றும் மக்களவையில் அவா் தெரிவித்தாா். இதற்கிடையில் மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரங்களை சமா்ப்பித்துள்ள போதிலும், கல்லூரிகளில் தகுதி வாய்ந்த முறையான பேராசிரியா்கள் உள்ளதை உறுதிப்படுத்தும் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு குழுக்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.