வீடு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துமூன்றடைப்பு கிராமத்தில் இருக்கும் காலனியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மேரியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.