மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டம் படிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதற்கு கவர்னர் முயற்சி செய்கிறார். பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை.
மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசனை செய்யாமல் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மாநில அரசின் கொள்கைகளை திட்டங்களை நிறைவேற்றுவது ஆளுநரின் கடமை என்று கூறியுள்ளார்.
இவ்வாறு பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளதையடுத்து, அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. நிர்வாகத் தலைவர் என்பதையும் தாண்டி மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட முயல்வதை இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.