மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கட்சியினர் அவர் நலம்பெற பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.