முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியுள்ளார். மாநிலத்தில் மூன்று முறை முதல் மந்திரியாகவும் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். முலாயமின் உயிரை காப்பதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடினர் ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் உயிரிழந்துள்ளார்.
முலாயம் சிங் யாதவ்வின் மரண செய்தியை அவரது மகனும் மாநில முன்னால் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இவரது மறைவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல் மந்திரி முலாயசிங் யாதவ் பிறந்த ஊரான உத்தர பிரதேசத்தின் சைபர் என்னும் கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியான மலாய் முலாயம் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்தநாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மூன்று நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என கூறியுள்ளார்.