முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 13 மதகுகளில் 3 மற்றும் 4வது மதகுகள் 35 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 534 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் இந்த தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு சென்றடையும்.முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டும் போது 13 மத நூல்களில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.