Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… லோயர் கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி உயர்வு…!!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜெனரேட்டர் மூலமாக 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. அதிலும் ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் சாரல் மலையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

அந்த வகையில் 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 141.40 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர்வரத்து வினாடிக்கு 2,106 கன அடியாக இருந்தது. இதனையடுத்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் நேற்று காலை 3 முதல் ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது ஜெனரேட்டரில் 34 மெகாவாட், மூன்றாவது ஜெனரேட்டில் 35 மெகாவாட் மற்றும் நான்காவது ஜெனரேட்டரில் 30 மெகாவாட் என மொத்தம் மூன்று ஜெனரேட்டர்களிலிருந்து 99 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |