Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணையின் வயது 126 – விவசாயிகள் மரியாதை

முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி லோயர் கேம்பில் உள்ள பென்னிக் குயிக்கின் சிலைக்கு விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும் நேரடியாக சுமார் இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலத்திற்க்கும், மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கருக்கும் பாசன வசதிகள் அளிக்கும் முல்லை பெரியாறு அணை கடந்த 1895 ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது. இன்றுடன் முல்லை பெரியாறு அணை 126 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி லோயர் கேம்பில் உள்ள பென்னிக் குயிக் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டிருக்கும் அவரது முழு திருஉருவ சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து முல்லைப் பெரியாறு பாயும் குருவன் உத்து பாலத்திலிருந்து மலர்தூவி மகிழ்ந்தனர். மேலும் முல்லைப் பெரியாரின் கேரள அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொண்டாடிய தேனி ஜெயபிரகாஷ் நாராயணன், சின்னமனூர் ராமமூர்த்தி, சீலையம்பட்டி சேகர் உள்ளிட்டோருக்கும் இந்த நிகழ்ச்சியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Categories

Tech |