Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….. கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது ; “முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |