இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தளர்த்தப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது”என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.