Categories
தேசிய செய்திகள்

முழுஊரடங்கு….. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவு…..!!!!!

நாட்டில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகளில், சுமார் 60 சதவீதம் கேரள மாநிலத்திலிருந்து தான் பதிவாகி வருகின்றன. ஓணம் பண்டிகையையொட்டி, ஊரடங்கில் கட்டுப்பாடுகளை கேரள மாநில அரசு தளர்த்தியது. இதன் காரணமாக, 17 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதமும், 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கொரோனா பரிசோதனையை விரைவுப்படுத்துவதோடு, தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |