தனது மகன் கேட்டான் என்பதற்காக ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் காரையே ஒரு தந்தை உருவாக்கியுள்ள சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணி அவரின் தந்தை ரோல்ஸ் ராய்ஸ் காரினை மரத்தால் 68 நாட்களில் செய்து கொடுத்துள்ளார். இந்த காரை இவர் முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கியுள்ளார். இந்த காரில் முன்னாடி இருக்கும் சக்கரம் மற்றும் பின்னாடி இருக்கும் சக்கரத்தை இணைக்கும் இரும்பை தவிர மற்ற அனைத்துமே மரத்தால் உருவாக்கியுள்ளார். காருக்கு தேவையான சக்கரம், கதவு, பேஸ், காரின் டாப், முன்பகுதி பின்பகுதி என அனைத்தையும் மரத்தால் உருவாக்கியுள்ளார்.
முதலில் ஒரு மரத்தை வைத்து காரின் அனைத்து பகுதிகளையும் உருவாக்குகிறார். அதன் பிறகு ஒரு மரத்தை அறுக்கும் கருவியைக் கொண்டு அனைத்து பகுதிகளையும் கார் போன்ற வடிவமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக மரத்தில் உள்ள அதிகமான பகுதிகள் அனைத்தையும் வெட்டி எடுக்கிறார். பின்னர் அந்த காரை முழுவதையும் பாலீஸ் செய்கிறார். சின்ன சின்ன எக்ஸ்ட்ரா பொருள்களை அதில் வைத்து காருக்கு மேல் வார்னிஷ் அடித்து முழுவதுமாக ரெடி செய்து விட்டார். இந்த கார் பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருந்தது. தனது மகன் கார் கேட்டதற்காக தந்தை மரத்தாலான ஒரு சூப்பர் காரை தயார் செய்து கொடுத்துள்ளார். இந்தக் கார் காலத்திற்கும் அழியாமல் அப்படியே இருக்கும்.