இந்த உலகிலேயே மிகவும் ஆடம்பரமான கார் என்றால் அது ரோல்ஸ் ராயல்ஸ். பணக்காரர்களாக இருக்கும் பலருக்கும் இந்த காரை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நடிகர்கள் தொடங்கி பல பிரபலங்கள் இந்த காரை வைத்துள்ளனர். இந்த கார் மீது அதிக ஆர்வம் ஏன் வருகிறது என்றால் இதனை நமக்கு தேவையான வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி அந்த கார் முழுவதையும் டைமண்ட்களால் படிய வைத்து உருவாக்கியுள்ளார். இந்த காரின் ஒரு இடத்தில் கூட விடாமல் இன்ச் பை இன்ச் டைமண்ட்களால் முழுவதும் பதித்து உருவாக்கியுள்ளார்.
இதற்காக இவர்கள் மொத்தமாக 4 மில்லியன் அதாவது 40 லட்சம் டைமண்ட் கிறிஸ்டல்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாயாம், ஆனால் இதில் பதிக்கப்பட்டுள்ள டைமண்ட்களின் விலை இந்த காரை விட அதிகம் என்று கூறுகிறார்கள். இதில் மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த காரை உருவாக்கியவர் தன்னுடைய சொந்த தேவைக்கு இல்லாமல், வாடகைக்கு பயன்படுத்தி வருகிறார் .இந்த காரை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு புக்கிங் செய்து சென்று வரலாம். ஒருமுறை இந்த காரை புக் செய்வதற்கு 350 யூரோஸ் என்று தெரிவிக்கின்றனர்.