புதுச்சேரி மாநிலத்தில் முழுநேர பள்ளிகள் திறப்பு க்கு பிறகு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து பள்ளிகளில் மதிய உணவு மீண்டும் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மதிய உணவு திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட அரசின் ஒப்புதலைப் பெற கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது அரைநாள் மட்டுமே பள்ளிகள் நடந்து வருகிறது. மதிய உணவுத் திட்டம் தொடங்கப்படும் நாளிலிருந்து பள்ளிகள் முழுநேரமும் இயங்க அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.