நடைபெற்றவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தந்த வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தொண்டி பேரூராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை வைத்து அதிகாரிகள் அறையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
அப்போது தாசில்தார் செந்தில்வேல் முருகன், செயல் அலுவலர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் சேக்ரட்நாத் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்துள்ளனர். மேலும் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.