Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதம்”…பி.எப்.ஐ அமைப்பினர் 5.20 கோடியை டெபாசிட் செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!

நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கடந்த 23ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட்  விசாரித்தது. அப்போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்டவிரோதமானது எனவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வேலை நிறுத்தம் நடத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் எனும் உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதிகள் அதனை மீறிய பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் மற்றும் மாநில குழுவை பொறுப்பு என குறிப்பிட்ட நீதிபதிகள் போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும் தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த சூழலில் கேரளாவில் மாநில அரசு பேருந்துகளை சேதப்படுத்தியதற்காக ரூபாய் 5.20 கோடியை பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு டெபாசிட் செய்ய வேண்டும் என கேரள மாநிலம் ஹை கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. pfi அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர் இரண்டு வாரங்களில் பணத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

Categories

Tech |