Categories
உலக செய்திகள்

முழு அதிகாரத்தையும் உபயோகப்படுத்துவேன்…. பல தடைகளை விதிப்பேன்…. எச்சரிக்கை விடுத்த ஜோ பிடென்….!!

நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய அன்னிய நாடுகளின் தலையீடு உள்ளதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா நாட்டில்  2016 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி அடைந்தது. வெற்றிக்கு ரஷ்யா உதவிகரமாக இருந்ததாக குற்றங்கள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டது.குற்றச்சாட்டினை டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் மறுத்தார்கள். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் ஆனது வருகின்ற நவம்பர் 3-ல் நடக்க இருப்பதால், அதில் டிரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் போட்டியிடுகின்றார். அதே சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோ பிடென் கருத்துக்களை கூறியுள்ளார். சென்ற 2016 ஆம் ஆண்டில் பார்த்த அதே சம்பவமானது மீண்டும் நடக்கின்றது.

இதில் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பல அன்னிய நாடுகள் நமது ஜனநாயகத்தின் நமது தேர்தல் முறையிலும் தலை இடுவதற்காக பல்வேறு ஆயுதங்களாக வந்து கொண்டிருக்கின்றனர். இதுபற்றி நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை. அவர்கள் தலையிடாமல் தடுப்பதற்கு என்ன வழி என்றால், எத்தகைய நாடு தலையிட முயற்சி செய்கிறதோ நாட்டினை உலக மக்களுக்கு காட்ட வேண்டும். மேலும் இத்தகைய விஷயத்தில் டிரம்பா நிர்வாகமானது பொதுவாக தோல்வியைத் தழுவிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நான் அடுத்த அதிபர் ஆனால் நமது தேர்தல் நடைமுறைகளில் தலையிட கூடிய அனைத்து நாடுகளின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வேன். அது மட்டுமன்றி முழு அதிகாரத்தினையும் உபயோகித்து பொருளாதாரம் உட்பட பல தடைகளை விதிப்பேன். தலையிட்ட நாடுகள் அனைத்தும் அதற்கான பெரும் விலை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |