Categories
மாநில செய்திகள்

முழு ஆட்டை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆம்பூரில் ஒரு முழு ஆட்டை மலை பாம்பு முழுங்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அடுத்த ஊட்டல் பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த உமா தனக்கு சொந்தமாக 15க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி  காட்டுப்பகுதியில் மேச்சலுக்காக அழைத்துச் சென்றார். அப்போது புதரில் பதுகி இருந்த மலைப்பாம்பு ஒன்று பெண்ணின் வெள்ளாட்டை திடீரென கவ்வி பிடித்தது. இதனை பார்த்த உமா மலைப்பாம்பு மீது கற்களை எடுத்து வீசி உள்ளார்.

ஆனால் அது விடாமல் ஆட்டை இழுத்துச் சென்று முழுவதுமாக விழுங்கி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத்துறையினர் மலைப்பாம்பை காப்பு காட்டில் இருந்து விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முழு ஆடை மலைப்பாம்பு விழுங்கிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |