தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கோவை, ஈரோடு உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஒரு மாதத்திற்குள் தங்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.