புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி இருந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பேருந்து இயக்கப்படாததால் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் இல்லாமல் பேருந்துகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்படவில்லை. ஆனால் அத்தியாவசிய தேவைக்காக மருந்துகள் மற்றும் பால் கடைகள் திறக்கப்படிருந்தது. இதனை தொடர்ந்து பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி இருந்துள்ளனர்.