ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோன்று ஆந்திரா மாநிலத்தில் இன்று முதல் 18 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு பிறகு பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கர்நாடகா, தெலுங்கானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது.