Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கின் போது ரயில், விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளிடம் டிக்கெட் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை சோதனையின்போது டிக்கெட்டுகளை காண்பித்து செல்ல வேண்டும் என்றும், போலியான டிக்கெட் நகல் வைத்திருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஆட்டோ, டாக்சி, ஓட்டுனர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |