Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு…. இலவச மளிகை, உணவுப் பொருட்கள் வழங்கல்…. தெற்கு ரயில்வே….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றை தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது. சென்னை கோட்டம் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து 300 பேக்கேஜ் அளவிலான மளிகைப் பொருள்களும், 1500 உணவுப் பொட்டலங்களும் கூலி தொழிலாளர்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

Categories

Tech |