தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். மேலும் உணவு தேவைப்படுவோர் 9498747614 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.