Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி: அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் மக்கள்..!

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்துதப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒத்துழைப்பை தர முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும்.

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலங்களில் எந்த வித கடைகளும் இயங்காது எனவும், மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 32வது நாளாக அமலில் உள்ள நிலையில், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மத்திய 1 மணி வரை இயங்கி வந்தன. ஆனால் சென்னையில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று மத்திய 3 மணி வரை அனைத்து அத்தியாவசிய கடைகளும் இயங்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தாம்பரம், திருவான்மியூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளில் மக்கள் கூட அலைமோதுகிறது. இதேபோல முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் பொருட்கள் வாங்க அலைமோதி வருகின்றன. சில இடங்களில் சமூக இடைவெளி என்பது குறைந்து காணப்படுகிறது.

Categories

Tech |