திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் நேற்று முழு ஊடரங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் முழு ஊரடங்கு நேற்று முறையாக பின்பற்றப்பட்டது. மேலும் மக்கள் அனாவசியமாக வெளியில் வரக்கூடாது, வாகன போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளால் பழனி நகரில் பெரும்பாலான சாலைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக மலை அடிவார பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் மயான அமைதி நிலவியது. அதேபோல் உடுமலை சாலை, திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளும் வாகன போக்குவரத்து இல்லாமல் காணப்பட்டது. மேலும் நேற்றைய ஊரடங்கில் தேவை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.