தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு ஊரடங்கான நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6,34,800 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 1,040 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 1,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.