தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக புறநகர் மின்சார ரயில்களில் முன்கள மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்காக சிறப்பு பயணச்சீட்டு மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக ரயில்கள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.