Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அன்று உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பார்சலுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்படும். திருக்கோவில்களில் திட்டமிட்ட விழாக்களை நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |