பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தியும் ஒரே நாளில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில் அங்கும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவதன் மூலம் முன்பைவிட தற்போது பெருமளவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் முழு ஊரடங்கை ஜூன் மாதம் தளர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடந்துவரும் நிலையில் ஒரே நாளில் அங்கு புதிதாக 2,381 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 28 நாட்களுக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் இதுவரை மொத்தம் 14,532,875 பேருக்கு தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது. மேலும் 34,216,087 பேருக்கு ஒரு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ள நிலையிலும் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.