தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.