தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நாளை முதல் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் வாகனங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆன்லைன், தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கோரும் பொருள்களை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.