தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை வழங்கக் கூடாது. தொழிற்சாலைகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் போன்றவற்றை கடைபிடிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.