தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கின் போது அவசர உதவி தேவைப்படுபவர்கள் காவல்துறை உதவி 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் காவலன் SOS செயலியை பயன்படுத்தலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு குறித்த தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், கொரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் 9498181236, 9498181239, 7200706492, 7200701843 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.