Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு… தமிழக அரசு அதிரடி….!!!

மாநகராட்சி மேயர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையவேண்டாம்.

மேலும் பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடித்து இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொண்டால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளலாம்
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Categories

Tech |