Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு… ரவிக்குமார் எம்பி வேண்டுகோள்…!!

கேரளாவைப் போல் தமிழகத்திலும் ஒரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று ரவிக்குமார் எம்பி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.

இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் கேரளாவைப் போல் தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமென்று ரவிக்குமார் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது கேரளாவில் மே 8 முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துவிட்டார் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன். இல்லை தமிழ்நாட்டிலும் அதுபோல் அறிவிக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நோயின் பரவல் அதிகமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |