முழு ஊரடங்கு போது வீட்டை விட்டு தேவை இன்றி வெளியே சுற்றியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று முழுஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் தடையை மீறி சுற்றியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வோரிடம் உரிய ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.