தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நாளையும், மே 2ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை – புதுச்சேரி, திருச்சி – கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை முழு ஊரடங்கையொட்டி ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.