Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை முன்னிட்டு… இரண்டு நாட்களே திறக்க அனுமதி… படையெடுத்து சென்ற மதுப்பிரியர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு மதுப்பிரியர்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்துச் சென்றனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை முதல் வருகின்ற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபான கடைகள் இன்றும், நேற்றும் இரண்டு நாட்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மது பிரியர்கள் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்து செல்ல தொடங்கினர்.

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 158 மதுபான கடைகளில் மது பிரியர்கள் ஏராளமானோர் கடைகளை திறப்பதற்கு முன்பே நேற்று கூட்டமாக குவிந்தனர். அதன்பின் மதுபான கடைகள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டதையடுத்து மதுபான பாட்டில்களை முண்டியடித்துக் கொண்டு மதுப்பிரியர்கள் வாங்கினர். அதனை தொடர்ந்து கிடைத்த மதுபானங்களை மது பிரியர்கள் கைகளில் தூக்கி பிடித்தபடி மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

Categories

Tech |