தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண நிதி வழங்கி உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து தர டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாபேயும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகளுக்கு தமிழக வேளாண் துறையுடன் இணைந்து கோடை உழவு செய்து தர உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.