Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கை விடுமுறையாக எண்ணி…. சிலர் ஊர் சுற்றுகிறார்கள் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு மே 10 முதல் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு மேலும் நீட்டிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததையடுத்து ஊரடங்கை அமல்படுத்த அரசும் பரிசீலனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “முழு ஊரடங்கு காலத்தை விடுமுறைகாலம் என்று நினைத்து மக்கள் சிலர் ஊர்சுற்றி வருகின்றனர். இது ஆபத்தான கொரோனா காலம் என்பதை இன்னும் அவர்கள் முழுமையாக உணரவில்லை. எனவே தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு விதிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |