தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளி முழு கவச உடையுடன் சென்று வாக்களித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அவரவர் தொகுதியிலிருக்கும் வாக்கு சாவடியில் ஆர்வமுடன் சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க செல்லும்போது முழு கவச உடையை பயன்படுத்தி தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலிருந்த வாக்குச்சாவடியில் கொரோனா நோயாளி ஒருவர் முழு கவச உடையுடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.