ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பார்கள். அதுபோல ஒரு ஆசிரியர் என்பவர் பல லட்சம் மருத்துவர்களையும், பல ஆயிரம் வழக்கறிஞர்களையும் உருவாக்குபவர். ஏற்றிவிடும் ஏணியாய் இருந்து தம் மாணவர்கள் உயரத்திற்கு செல்வதை கண்டு பெருமை அடைபவர்கள் ஆசிரியர்கள்.
அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திலுள்ள பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முதல் தலைமுறை மாணவர்களையே அவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியராக மாற்றியுள்ளார். ஆம், மாணவர்களே தங்கள் பெற்றோருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். அதோடு அவர் தெருக்களையே வகுப்பறைகளாக மாற்றியுள்ளார். ஒரு ஆசிரியரால் செய்ய முடிவதை வேறு யாராலும் செய்ய முடியாது என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.
https://youtu.be/k3FJlQ6c2QE