தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் இரண்டு அவசரகால மதகுகள் திறக்கப்பட்டு 2300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தானியங்கி மோதல்கள் மூலம் 27ஆயிரம் கன அடி, அவசரகால மதகுகள் மூலம் 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘
25.02 அடி கொண்ட ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இருபத்தி ஒரு கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.