Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்த நிலையில் நேற்று இரவு 11.35 மணி அளவில் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இந்த உபரி நீர் முழுவதும் அணை நீர் மின் நிலையம், சுரங்க நீர்மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர்,பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. 41 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

Categories

Tech |