பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டில் அடுத்த கொரோனா அலைக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் தற்போது கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைய தொடங்கியுள்ளது. இதனால் சில விதிமுறைகளில் இன்றிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்தபோது அவர் கூறியதாவது, எங்கள் நாடு தற்சமயம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கொரோனா அலைக்கு எதிரானதாக எங்களது பாதுகாப்பு அமையவேண்டும். அடுத்து என்ன நிகழப்போகிறது? என்றும் நாங்கள் கவனித்துக் கொண்டு உள்ளோம். எனவே தான் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்றார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தொற்று பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பது நமக்கு தெரியும்.
இதனால் தான் மக்கள் இதற்கு முன்பு வரை பின்பற்றிய கொரோனா விதிமுறைகளை மீண்டும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறேன். மேலும் ஒரு சில மக்கள் தடுப்பூசி செலுத்தமாட்டார்கள். அவர்களுக்கு புதிய கொரோனா ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விதிமுறைகளில் தளர்வு இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமை மருத்துவரான கிரிஸ் விட்டி கூறியிருப்பதாவது, பிரிட்டனை பொறுத்தமட்டில் ஒரு சுவர் போன்றது தான் தடுப்பூசி. எனினும் அது முழு சுவர் அல்ல. அதில் கசிவுகளும் ஏற்படத்தான் செய்யும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.