பிரதமர் நரேந்திர மோடி முழு நாட்டையும் கிணற்றில் தள்ளிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் அந்த பேச்சு வார்த்தை எந்த ஒரு பதிலையும் எட்டவில்லை. வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடும் குளிரில் இரவு பகல் பாராமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. ஆனால் மத்திய அரசு என்னவோ அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.
இந்நிலையில் பீகார் விவசாயி எம்எஸ்பி- ஏபிஎம்சி இல்லாமல் பெரும் சிக்கலில் உள்ளனர். இப்போது பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.