Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முழு நேர கடையாக மாற்ற வேண்டும்” சிரமப்படும் தொழிலாளர்கள்…. பொதுமக்கள் அளித்த மனு…!!

சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டுறவுத்துறை துணை பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளனர். 

வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் நேற்று  சாய்நாதபுரம் அருகில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் பொதுமக்கள் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி  தலைமையில் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. அங்கு 700-க்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

ஆனால் ரேஷன் கடை பகுதி நேரத்தில் இயங்கி வருவதால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டும் தான் திறக்கப்படுகிறது. இரு நாட்களில் மட்டும் திறக்கப்படுவதால் ரேஷன் பொருட்களை வாங்க அதிகமானனோர் வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று பொருட்களை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் பொருட்களை வாங்குபவர்கள் சிலர் கூலி தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் பகுதி நேரமாக செயல்படும் ரேஷன் கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் முழுநேர ரேஷன்  கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |