சர்தார் திரைப்படத்தின் பின்னணி இசையில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்தார் திரைப்படத்தின் பின்னணி இசையில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.